இந்து கூட்டு குடும்பங்களின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்று கடந்த 2005-ம் ஆண்டில் இந்து சொத்துரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
இந்து கூட்டு குடும்பங்களின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு. இந்து சொத்துரிமை சட்டதிருத்தம் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.