சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்தம், வணிக வளாகங்கள், முக்கிய பிரமுகர்கள் ஓய்வு அறை கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டில் தொடங்கியது. தற்போது கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. புதிய அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் ஒரே நேரத்தில் 2,000 கார்களை நிறுத்த முடியும். வரும் நவம்பர் மாதத்தில் வாகன நிறுத்தத்தை திறக்க திட்டமிட்டிருப்பதாக சென்னை விமான நிலைய இயக்குநர் சரத் குமார் தெரிவித்துள்ளார்.