பிப். 28 வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது உள்நாடு, சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது.
சர்வதேச விமான சேவைக்கான தடை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன்படி மார்ச் 28 வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வந்தே பாரத் திட்டத்தில் சிறப்பு சர்வதேச விமான சேவைகள் நடைபெறும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.