சர்வதேச விமான சேவைக்கு டிச. 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் உள்நாடு, வெளிநாடு விமான சேவை கடந்த மார்ச் இறுதியில் நிறுத்தப்பட்டது. இதன்பின் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் வெளிநாட்டு விமான சேவை இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை வெளிநாட்டு விமான சேவைக்கான தடை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சில வெளிநாட்டு விமான சேவைகள், சரக்கு விமான சேவைகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.