இந்தியன் ஆயில் சார்பில் காம்போசிட் சிலிண்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிலிண்டர்கள் 5 கிலோ, 10 கிலோ எடைகளில் கிடைக்கும். இந்த சிலிண்டர் உட்புறம் எச்டிபிஇ லைனிங் மற்றும் பாலிமர் சுற்றப்பட்ட பைபர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் எடை குறைவு என்பதால் சுலபமாக கையாள முடியும். காஸ் எவ்வளவு உள்ளது என்பதை வெளியில் இருந்து பார்க்க முடியும்.
பழைய சிலிண்டர்களை மாற்றிக் கொள்ள விரும்பாதோர் புதிய 10 கிலோ காம்போசிட் சிலிண்டர்களை ரூ.3,350 டெபாசிட் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் எஸ்.எம்.வைத்யா தெரிவித்துள்ளார்.