ஆங்கி கேரியர் என்ற பெண் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சஸ்காட்செவனில் அமைந்துள்ள வாஸ்கேசியு ஏரியில் உள்ள ஒரு பனி மீன்பிடி இடத்திற்க்கு சென்றுள்ளனர்.
அங்கு அவளது ஐபோன் 11 ப்ரோ (Iphone 11 pro) ஏரிக்குள் விழுந்தது என சிடிவி செய்தி பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அவள் சிடிவி செய்தி பத்திரிக்கையில் கூறுகையில், நான் எனது கூடாரம் பறக்கும் பொழுது அதை பிடிக்க முயன்றேன் அப்பொழுது எனது மடியிலிருந்த எனது ஐபோன் ஏரியில் விழுந்தது.
30 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், ஆங்கி தனது ஐபோனை மீட்டெடுக்க விரும்பினார், ஏனெனில் அவளது ஐபோன் கிடைத்துவிட்டால் அந்த ஐபோனை ஆப்பிள் நிறுவனத்திடம் கொடுத்து அதை மாற்ற முயற்சி செய்யலாம் என்று நினைத்தார்.

எனவே அவள் மீண்டும் வாஸ்கெசியு ஏரிக்குச் சென்றாள், அங்கு இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு காந்தங்களுடன் ஒரு மீன்பிடி கொக்கி கொண்டு, அவளுடைய ஐபோனை மீட்டெடுக்க முயற்ச்சி செய்தாள், அதிர்ஷ்டவசமாக அவளது ஐபோன் கிடைத்தது.
அவள் மிகுந்த சந்தோசத்துடன் தனது வீட்டிற்கு சென்று அவளது ஐபோனை சார்ஜ் செய்தபொழு ஆச்சரியப்படும்படி அவளது ஐபோன் வேலை செய்தது.
ஐபோன் 11 ப்ரோ (Iphone 11 pro) IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. எனவே இது சுமார் 30 நிமிடங்கள் நீரில் 4 மீட்டர் வரை நீடிக்கும். ஆனால் ஆங்கி விஷயத்தில், ஐபோன் 11 ப்ரோ அந்த வாக்குறுதியை மீறியுள்ளது.