ஐபிஎல் கிரிக்கெட் நிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத இருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜி, ஒரு உதவியாளருக்கு தொற்று ஏற்பட்டது. மேலும் ஐதராபாத் அணியின் விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஸ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளது. மே 30-ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் போட்டி ஒத்தி வைக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகு ஐபிஎல் போட்டிக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *