இந்திய ரபேல்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் – சீனாவுடன் கைகோத்து பூச்சாண்டி காட்டுகிறதா ஈரான்

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதில் முதல்கட்டமாக 5 போர் விமானங்களை கடந்த 27-ம் தேதி இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது.


அந்த போர் விமானங்களை இந்திய விமானிகள் ஓட்டி வருகின்றனர். பிரான்ஸுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொலைவு 7,000 கி.மீ. ஆகும். எனவே வரும் வழியில் இந்தியாவின் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தபார் விமானப்படை தளத்தில் 5 ரபேல் போர் விமானங்களும் நேற்று தரையிறங்கின. அங்கு விமானிகள் சிறிது ஓய்வெடுத்தனர். விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.

ஈரான்-போர்க்கப்பலில்-இருந்து-ஏவப்பட்ட-ஏவுகணை.
ஈரான்-போர்க்கப்பலில்-இருந்து-ஏவப்பட்ட-ஏவுகணை.


இதற்கிடையில் ஈரான் நாடு நேற்று தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது ஈரான் ஏவிய அதிநவீன ஏவுகணை ஒன்று, இந்திய ரபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த அல் தபார் தளத்தை நோக்கி வருவது ரேடாரில் தெரிந்தது.
விமானப்படைத் தளம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது.

எனினும் அந்த ஏவுகணை அல் தபார் தளத்துக்கு அருகே கடலில் விழுந்து வெடித்தது. இதேபோல் ஈரான் ஏவிய மற்றொரு ஏவுகணை கத்தார் நாட்டுக்கு அருகே கடலுக்கு அருகே விழுந்தது.
ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு நீடித்தது.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டால் அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்காரணமாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி கொண்டது.

கடந்த சில நாட்களாக ஈரான் ராணுவம் போர் ஒத்திகை நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களாக ஈரான் ராணுவம் போர் ஒத்திகை நடத்தி வருகிறது.

சீனா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் மட்டும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானின் குவாதர் பகுதியில் சீனா பிரம்மாண்ட துறைமுகத்தை கட்டியுள்ளது. இதற்கு போட்டியாக ஈரானின் சாபஹரில் இந்தியா மிகப்பெரிய துறைமுகத்தை கட்டமைக்க திட்டமிட்டிருந்தது.

இதுதொடர்பாக இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்காவை தீவிரமாக எதிர்க்கும் ஈரான் முழுமையாக சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது. சீனாவின் கட்டளைபடி சாபஹார் துறைமுக ஒப்பந்தத்தை ஈரான் அண்மையில் ரத்து செய்தது.

தற்போது சீனாவின் தூண்டுதலின்பேரில் இந்திய ரபேல் போர் விமானங்களை குறிவைத்து அந்த நாடு ஏவுகணை தாக்குதல் நடத்தியதா என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
கத்தார் நாட்டில், அமெரிக்க விமானப்படைத் தளம் உள்ளது. அந்த விமானப்படைத் தளத்தை குறிவைத்து மற்றொரு ஏவுகணையை ஈரான் வீசியுள்ளது என்று அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *