ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் பொருட்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கலெக்டர் சீதாலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“வீட்டு உபயோக மின்சார பொருட்கள், எரி எண்ணெய் அழுத்த அடுப்பு உற்பத்தி ஆகியவற்றை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஆய்வு செய்ய கிண்டி மண்டல தரக்கட்டுப்பாட்டு இணை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தரக்கட்டுப்பாடு முத்திரை (ஐஎஸ்ஐ) பெற்ற மின் சாதன பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.2 லட்சம் வரை அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று கலெக்டர் சீதாலட்சுமி எச்சரித்துள்ளார்.