டெல்லியில் ‘லோன் வுல்ப்’ தாக்குதல் சதி.. ஐ.எஸ். தீவிரவாதி சிக்கினான்…

டெல்லியில் ‘லோன் வுல்ப்’ தாக்குதல் நடத்த தீட்டப்பட்டிருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.எஸ். தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.

சிரியா, இராக்கை தலைமையிடமாகக் கொண்டு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது.

இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானிலும் ஆழமாக கால் ஊன்றி உள்ளது. இந்தியாவில் கால் பதிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

துப்பாக்கி சண்டை

டெல்லி கரோல் பாக் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதி பதுங்கியிருப்பதாக டெல்லி சிறப்பு அதிரடிப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

டெல்லியில் தீவிரவாதி பதுங்கியிருந்த இடத்தில் குவிந்திருந்த தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள்.
டெல்லியில் தீவிரவாதி பதுங்கியிருந்த இடத்தில் குவிந்திருந்த தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள்.

இதன்பேரில் அந்தப் பகுதியை நேற்று நள்ளிரவு போலீஸாரும் என்எஸ்ஜி என்றழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும் சுற்றி வளைத்தனர்.

அங்குள்ள வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதி, போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இறுதியில் வீட்டில் பதுங்கியிருந்த அபு யூசூப் கானை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து கைத்துப்பாக்கி மற்றும் 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

வெடிகுண்டுகள் செயலிழப்பு

அந்த வெடிகுண்டுகளை என்எஸ்ஜி வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி செயல் இழக்கச் செய்தனர். இதற்கான தானியங்கி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட அபு யூசூப் கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தர பிரதேசத்தின் காஜியாபாத், பல்ராம்பூர், உத்தராகண்ட் மாநில முகவரிகளை அபு யூசூப் கான் அளித்துள்ளான்.

வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்ய என்எஸ்ஜி வீரர்கள் சிறிய ரக தானியங்கி வாகனங்களை பயன்படுத்தினர்.
வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்ய என்எஸ்ஜி வீரர்கள் சிறிய ரக தானியங்கி வாகனங்களை பயன்படுத்தினர்.

அந்த முகவரிகள் உண்மையானதா, அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘லோன் வுல்ப்’ தாக்குதல் என்றால் என்ன?

ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள், ‘லோன் வுல்ப்’ தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதாவது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிநபராக களமிறங்கும் தீவிரவாதி பலரை கொன்று குவிப்பதை ‘லோன் வுல்ப்’ தாக்குதல் என்றழைக்கின்றனர்.

தற்கொலைப் படை தீவிரவாதியாக வெடித்துச் சிதறுவது, மக்கள் கூட்டத்தில் வாகனங்களை மோதுவது என பல்வேறு வகைகளில் ஐ.எஸ். அமைப்பு ‘லோன் வுல்ப்’ தாக்குதலை நடத்துகிறது. அதே பாணியில் இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 5-ம் தேதி அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பூமி பூஜை, கடந்த 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருந்து உள்ளனர்.

கைது செய்யப்பட்ட அபு யூசூப் கான் (மத்தியில் இருப்பவர்)
கைது செய்யப்பட்ட அபு யூசூப் கான் (மத்தியில் இருப்பவர்)

எனினும் பலத்த பாதுகாப்பு காரணமாக இரு விழாக்களிலும் ஐ.எஸ். அமைப்பால் தாக்குதல் நடத்த முடியவில்லை.

டெல்லி, உத்தர பிரதேசத்தில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனவே டெல்லியும் உத்தர பிரதேசமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தென்மாநிலங்களில் உஷார்

இந்திய துணை கண்டலத்தில் விலயா ஆப் ஹிந்த் என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பு செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இந்த அமைப்பில் பலர் இணைந்திருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச்சில் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் கேரளாவை சேர்ந்த அபு காலித் தற்கொலைப்படை தீவிரவாதியாக வெடித்துச் சிதறினான்.

இதேபோல கேரளாவை சேர்ந்த பலர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்திருப்பதை உளவுத் துறை உறுதி செய்துள்ளது. எனவே தென்மாநிலங்களும் உஷாராக இருக்கும்படி உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *