லடாக்கில் வாலாட்டிய சீனா..ஒட்ட நறுக்கிய ஐடிபிபி வீரர்கள்…

கடந்த 1962 சீன போருக்குப் பிறகு இந்திய, சீன எல்லை பாதுகாப்புக்காக இந்தோ திபெத் எல்லை காவல் படை தொடங்கப்பட்டது.

லடாக்கின் காராகோரத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை சுமார் 3,488 கி.மீ. தொலைவை இந்த படை வீரர்கள் காவல் காத்து வருகின்றனர்.


சுதந்திர தின விழாவில் இந்தோ திபெத் காவல் படையை சேர்ந்த 21 வீரர்களுக்கு வீர தீர விருதுகள் வழங்கப்பட உள்ளன.

கடந்த மே, ஜூன் மாதங்களில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் சீன வீரர்களை தீரமுடன் எதிர்த்து போரிட்டதற்காக அவர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

லடாக் எல்லையில் செயல்படும் இந்தோ, திபெத் காவல் படை முகாம்.
லடாக் எல்லையில் செயல்படும் இந்தோ, திபெத் காவல் படை முகாம்.

இதுகுறித்து இந்தோ திபெத் காவல் படை விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“கல்வான் பள்ளத்தாக்கு மட்டுமன்றி லடாக் எல்லையின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர்.

அவர்கள் முன்னேற விடாமல் இந்தோ திபெத் காவல் படை வீரர்கள் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர்.


எல்லையில் சீன வீரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

சில இடங்களில் 17 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை இருதரப்புக்கும் இடையே சண்டை நீடித்தது.
எல்லையில் சீன வீரர்கள் முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி ஐடிபிபி வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சில பகுதிகளில் சீன வீரர்களுடன் நேருக்கு நேர் போரிட்டனர். இமயமலை பகுதிகளில் போரிட ஐடிபிபி வீரர்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.

தங்களது போர் திறனால் இந்திய மண்ணை வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

பனிசூழ்ந்த லடாக் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள ஐடிபிபி வீரர்கள் .
பனிசூழ்ந்த லடாக் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள ஐடிபிபி வீரர்கள் .

கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன வீரர்களுடனான சண்டையில் காயமடைந்த இந்திய வீரர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர்.

இதன்காரணமாக மே 5, 6-ம் தேதிகளில் இருநாடுகளின் வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல்கள் தவிர லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் வாலாட்டியிருப்பதும் ஐடிபிபி வீரர்கள் ஒட்ட நறுக்கியிருப்பதும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *