எம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர்

சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் 14 கிலோ எடையுள்ள கேக்கை அ.தி.மு.கவின் சிறுபான்மை பிரிவின் துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் வெட்டி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் அமைச்சர்கள், கட்சியினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிரதமர் நரேந்திரமோடியும் தமிழில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் ஜெ.எம்.பஷீர்
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் ஜெ.எம்.பஷீர்

சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் ஆண்டுந்தோறும் அ.தி.மு.கவின் சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர், எம்.ஜி.ஆர் பிறந்த நாளைக் கொண்டாடுவது வழக்கம். பிறந்தநாளையொட்டி பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை ஜெ.எம்.பஷீர் வழங்குவார்.

இந்த ஆண்டும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை ஜெ.எம்.பஷீர் தலைமையில் அ.தி.மு.கவினர் ராமாவரத்தில் கொண்டாடினர். அப்போது எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளையொட்டி 14 கிலோ எடையுள்ள பிரமாண்டமான கேக்கை ஜெ.எம்.பஷீர் வெட்டினார். அந்தக் கேக்கில் எம்.ஜி.ஆர் என எழுதப்பட்டியிருந்தது. எம்.ஜி.ஆரின் பேரன் ராமசந்திரனுக்கு கேக்கை பஷீர் ஊட்டினார்.

இந்த விழாவில் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.எம்.பாபு, நெல்லை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமதுஜான், தேசிய தலைவர் படத்தின் இயக்குநர் அரவிந்த ராஜ், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *