முதல்வர் ஜெயலலிதா வீட்டில் 4 கிலோ தங்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

முன்னாள்-முதல்வர்-ஜெயலலிதாவின்-வேதா-இல்லம்.
முன்னாள்-முதல்வர்-ஜெயலலிதாவின்-வேதா-இல்லம்.


இதற்கான ஈடு தொகையாக ரூ.68 கோடியே 88 லட்சம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு வேதா நிலையம் அரசு சொத்தாக்கப்பட்டுள்ளது.வேதா இல்லத்தில் உள்ள பொருட்கள் தமிழக அரசிதழில் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் 4 கிலோ தங்கம், 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளன என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 32 ஆயிரத்து 721 பொருட்கள் வீட்டில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *