ஜேஇஇ முதன்மை தேர்வு ஒத்திவைப்பு

ஜேஇஇ முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தேசிய அளவில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு முதல் ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வரும் ஏப்ரல் 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மே 24, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருந்த ஜேஇஇ முதன்மை தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *