ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் – திமுகவை கடுமையாக விமர்சித்த ஜெ.எம்.பஷீர்

அதிமுகவின் சிறுபான்மை பிரிவின் துணை செயலாளரான ஜெ.எம்.பஷீர், வரும் சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மை பிரிவினரின் ஒட்டுக்களை அதிமுகவுக்கு கிடைக்க வழிவகை செய்வேன் என ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றியிருக்கிறார்.

அ.தி.மு.க.வின் சிறுபான்மையினர் நலப்பிரிவின் துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர். இவர், புதிதாக திறக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நேற்று வந்தார். பின்னர் நினைவிடத்தில் சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டார். அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூன்றாம் தடவையாக மாபெரும் வெற்றி பெற இஸ்லாமியர்கள் உறுதுணையாக இருப்போம் என்று சென்னையில் உள்ள தர்கா நிர்வாகிகளுடன் ஜெ.எம்.பஷீர் உறுதிமொழி எடுத்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெ.எம்.பஷீர்
ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெ.எம்.பஷீர்

இந்தப் பிராத்தணையில் நஸீர், சையத் நஸீர்,இஸ்மாயில், ஆருண் பாஷா, தர்கா நிர்வாகிகள் மஜாஸ், அஸ்வாத் ரகுமான், தஸ்தகீர் சாஹிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஜெ.எம்.பஷீர் கூறுகையில், “சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறி தி.மு.க ஏமாற்றிவருகிறது. புரட்சி தலைவி அம்மாவின் ஆசியில் வரும் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி வெற்றி பெறும். இஸ்லாமிய மக்களுக்கு ஜெயலலிதா, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் செய்த நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துக் கூறி அதிமுகவுக்கு வாக்குகளை சேகரிக்க சபதமிட்டிருக்கிறோம்” என்றார்.

அதிமுகவுக்கு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைக்க சிறுபான்மையினர் பிரிவின் துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் பதவி ஏற்ற நாளிலிருந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அதற்காக இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளைச்சந்தித்து அ.தி.மு.கவுக்கு ஆதரவு திரட்டிவருகிறார். விரைவில் கட்சித் தலைமையின் அனுமதியோடு மாநாடு நடத்தப்படவுள்ளதாக ஜெ.எம்.பஷீர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *