சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டில் வெளிவந்த இந்தியன் படம் தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 திரைப்படத்தை சங்கர் இயக்கி வருகிறார். கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ராகுல் பிரீத் சிங் ஆகியோர் படத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் நடிகை காஜர் அகர்வால், கவர்ச்சி எல்லையை தாண்டி நடிப்பதாகவும் பிகினி உடையில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைக்க உள்ளதாகவும் ‘இந்தியன் 2’ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.