கல்வி தொலைக்காட்சியில் எப்போது, எந்த வகுப்பு, எந்த பாடம்? முழுவிவர அட்டவணை வெளியீடு

கல்வி தொலைக்காட்சியில் 2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புகளுக்கான பாடங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. அதன் முழுவிவரம்:

10-ம் வகுப்பு

பத்தாம் வகுப்பு- காலை 8 முதல் 9 மணி வரை – தமிழ், ஆங்கிலம்
பத்தாம் வகுப்பு- காலை 10 முதல் 11 மணி வரை – கணிதம், அறிவியல்
பத்தாம் வகுப்பு- மதியம் 12 முதல் 12.30 மணி வரை – சமூக அறிவியல்

9-ம் வகுப்பு

9-ம் வகுப்பு- காலை 9 முதல் 10 மணி வரை – தமிழ், ஆங்கிலம்
9-ம் வகுப்பு- காலை 11 முதல் 12 மணி வரை – கணிதம், அறிவியல்
9-ம் வகுப்பு- மதியம் 12.30 முதல் 1 மணி வரை- சமூக அறிவியல்

2 முதல் 8-ம் வகுப்பு வரை

எட்டாம் வகுப்புக்கான பாடங்கள் மதியம் 1.30 மணி முதல் 4 மணி வரையும், 6-ம் வகுப்பான பாடங்கள் மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், 2 முதல் 5-ம் வகுப்புக்கு மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் பாடங்கள் நடத்தப்படும்.
7-ம் வகுப்பு பாடங்களுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்படவில்லை.

நீட், ஜேஇஇ பயிற்சி


சனி, ஞாயிற்றுக்கிழமை நீட், ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *