காமராஜரின் பிறந்த நாள், தமிழக அரசின் சார்பாக கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்று காமராஜரின் 118-வது பிறந்த நாளாகும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் காமராஜரின் பிறந்த நாள் எளிமையாக கொண்டாடப்பட்டது.
விருதுநகரில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லம், மணிமண்டத்தில் எளிமையாக பிறந்த நாள் விழா எளிமையாக நடைபெற்றது. தமிழக அரசு சார்பிலும் காமராஜர் பிறந்த நாள் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
காமராஜரின் பேத்தி கமாலிகா காமராஜர், சமூக வலைதளம் வாயிலாக உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மதிய உணவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.