புது வீட்டில் மனைவிக்கு மெழுகு சிலை..கர்நாடக ஷாஜகானின் பாசம்…

மனைவி மும்தாஜ் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. எல்லோராலும் தாஜ்மஹால் கட்ட முடியாது. ஆனால் மனைவி மீதான பாசத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குப்தா.

மனைவி மாதவியின் சிலையை பார்த்து கதறி அழும் ஸ்ரீநிவாஸ் குப்தா.
மனைவி மாதவியின் சிலையை பார்த்து கதறி அழும் ஸ்ரீநிவாஸ் குப்தா.


கர்நாடகாவின் கொப்பல் பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸின் மனைவி மாதவி. கடந்த 2017 ஜூலையில் நேரிட்ட கார் விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரை நெஞ்சில் நிறுத்தி ஸ்ரீநிவாஸ் குப்தா வாழ்ந்து வருகிறார்.
கொப்பல் பகுதியில் ஸ்ரீநிவாஸ் புதிதாக ஒரு வீடு கட்டியுள்ளார்.

அந்த வீட்டின் நடுஹாலில் மனைவியை போன்று அழகான மெழுகு சிலையை வடிவமைத்து உள்ளார். சிரித்த முகத்துடன் பட்டுப் படவை உடுத்தி நடுஹாலில் மாதவி ஷோபாவில் அமர்ந்திருக்கிறார். அச்சு அசல் அவரே உயிரோடு வந்திருப்பது போல தத்ரூபமாக சிலை செதுக்கப்பட்டுள்ளது.

மெழுகு சிலைக்கு தங்க நகைகளை அணிவித்து அலங்கரித்திருக்கிறார் ஸ்ரீநிவாஸ்.
சில நாள்களுக்கு முன்பு வீட்டின் கிரக பிரவேசம் நடைபெற்றது. அப்போது ஸ்ரீநிவாஸ் குப்தாவும் அவரது 2 மகள்களும் மாதவியுடன் அமர்ந்து விதவிதமாக புகைப்படம், வீடியோ எடுத்தனர். உறவினர்கள் முன்னிலையில் ஸ்ரீவாஸ் கண்கலங்கி கதறி அழுத்தார்.


ஸ்ரீநிவாஸ் கூறும்போது, “புது வீடு கட்டியுள்ளேன். வீட்டின் நடுவே மனைவியின் மெழுகு சிலையை வடிவமைத்து வைத்துள்ளேன். இதன்மூலம் அவள் எங்களோடு இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்றார்.
ஸ்ரீநிவாஸ் கர்நாடகாவின் ஷாஜகான் என்று அந்த மாநில மக்கள் புகழ்ந்து பாராட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *