முன்னாள் முதல்வரின் மகளுக்கு செல்போனில் 3 தடவை ஆபாச அழைப்பு

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகளுக்கு 3 தடவை செல்போனில் ஆபாச அழைப்புகள் வந்துள்ளதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா ஷெரீப் (45). இவர் திருமணமாகி சென்னை ஆர்.ஏ புரம் கேசவபுரம் கிழக்கு அவென்யூவில் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார். இவரின் கணவர் ஷெரீப் வேளச்சேரியில் கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ரூபையா ஷெரிப்பின் செல்போன் எண்ணுக்கு மூன்று தொலைப்பேசி எண்களில் இருந்து தொடர்ந்து ஆபாச அழைப்புகள் வந்துள்ளதாக அவர் 27-ம் தேதி சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் 294 பி, 354 டி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூபையா ஷெரிப் அளித்துள்ள புகாரில் அவரின் செல்போன் நம்பருக்கு 2 செல்போன் நம்பர்களிலிருந்தும் ஒரு லேண்ட் லைன் நம்பரிலிருந்தும் அழைப்பு வந்துள்ளது. அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்பித்துள்ளார். அந்த நம்பர்கள் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை நாடியுள்ளோம். ஆபாசமாக பேசியவர்கள் குறித்த தகவல் கிடைத்ததும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

1989-ல் முப்தி முகமது சயீத் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார், அப்போது ரூபையா ஷெரீப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். பின்னர் தீவிரவாதிகளின் கோரிக்கைளை நிறைவேற்றியபிறகு ரூபையா ஷெரீப் மீட்கப்டபட்டார். இதுபோன்ற சம்பவங்களால் பாதுகாப்பு கருதி குடும்பத்தோடு ரூபையா ஷெரீப் சென்னையில் செட்டிலாகினார். அவருக்கு திடீரென ஆபாச செல்போன் அழைப்புகள் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *