பாலியல் வழக்கில் சிக்கிய நாகர்கோவில் காசியின் லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள் போலீசாருக்கு எதிராக கொந்தளிக்கும் காசியின் தங்கை

நாகர்கோவிலைச் சேர்ந்த இன்ஜினீயர் காசி என்கிற சுஜியின் லேப்டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்கள் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் நேரத்தில் காசியின் சகோதரி போலீசாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

காசி என்ற சுஜி


நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்கிற சுஜி மீது சென்னை பெண் மருத்துவர், நாகர்கோவில் எஸ்.பி ஸ்ரீநாத்திடம் இ-மெயில் மூலம் புகாரளித்தார். ஊரடங்கு நேரத்திலும் நாகர்கோவில் எஸ்.பி உத்தரவின்பேரில் போலீசார் காசியிடம் விசாரித்தனர். பின்னர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் மருத்துவர் அளித்த புகாரால் காசியின் சுயரூபம் வெளியில் தெரிந்தது.

பெண் மருத்துவரைத் தொடர்ந்து காசி மீது அடுத்தடுத்து புகார்கள் வந்தன. காசியின் நண்பர்கள் ஜினோ, தினேஷ் ஆகியோரும் கைதாகினர். அதனால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீட்டுக்கு வந்த போலீசார், அப்பாவிடம் அநாகரிகமாக நடந்துக் கொண்டனர். பின்னர் வீட்டிலிருந்து அவரை தரதரவென்று இழுத்து வெளியில் சென்றனர். ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என அம்மா, கேட்டதற்கு அவரை போலீசார் தள்ளிவிட்டு சென்றனர். அதனால் அம்மா மயங்கி கீழே விழுந்துவிட்டார். ஆனால் போலீசார் எதையும் கண்டுக்கெள்ளவில்லை.

காசியின் சகோதரி

லேப்டாப் வீடியோக்கள்


இந்தநிலையில் காசியின் தந்தை தங்கப்பாண்டியன் போலீசாருக்கு எதிராக பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து அவரின் வீடு சர்ச்சைக்குள்ளானது. பின்னர் காசியின் தந்தை தங்கப்பாண்டியன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்தச் சூழலில் காசிக்கு சொந்தமான கோழிப்பண்ணையிலிருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

சைபர் க்ரைம் போலீசாரின் உதவியோடு அந்த லேப்டாப் ஓபன் செய்யப்பட்டது. அதில், ஏராளமான ஆபாச படங்கள், வீடியோக்கள் இருந்ததாக சிசிபிஐடி போலீசார் கூறியுள்ளனர். மேலும் இந்த லேப்டாப் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காசியின் தங்கை ஆவேசம்


சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கை மிகைப்படுத்தி வருவதாக காசியின் சகோதரி திடீரென கொந்தளித்துள்ளார். அவர் கூறுகையில், என்னுடைய அப்பா தங்கப்பாண்டியன், காவல் துறையினருக்கு எதிராக பல புகார்களை கொடுத்தார். அதனால்தான் அப்பா கைது செய்யப்பட்டுள்ளார். அப்பாவுக்கு சில தினங்களாக சளி, இருமல் பிரச்சினை இருந்தது. அதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்தச் சமயத்தில்தான் வீட்டுக்கு வந்த போலீசார், அப்பாவிடம் அநாகரிகமாக நடந்துக் கொண்டனர். பின்னர் வீட்டிலிருந்து அவரை தரதரவென்று இழுத்து வெளியில் சென்றனர். ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என அம்மா, கேட்டதற்கு அவரை போலீசார் தள்ளிவிட்டு சென்றனர். அதனால் அம்மா மயங்கி கீழே விழுந்துவிட்டார். ஆனால் போலீசார் எதையும் கண்டுக்கெள்ளவில்லை.

துப்பாக்கியை காட்டி மிரட்டல்

கையில் கொண்டு வந்த செக் ஒன்றை அறையில் வைத்து பின்னர் அதை அப்பாவை எடுக்கச் சொன்னார்கள். அப்பா அதற்கு மறுத்து தெரிவித்ததும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்கள். அதனால் பயத்தில் போலீசார் கூறியதுபோல அப்பா செய்தார். அதை அவர்களுக்கு சாதகமாக வீடியோவாக எடுத்துக் கொண்டனர். பின்னர் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். இப்போது அப்பா, அண்ணன் என இருவரும் இல்லாமல் நானும் அம்மாவும் ஆதரவில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

போலீஸ் தரப்பிலிருந்து பலவகையில் மிரட்டல்கள் வருகின்றன. நடந்தச் சம்பவங்களை வெளியில் சொன்னால் காலி செய்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். அப்பா, அண்ணன் உயிருக்கு ஆபத்து உள்ளது. போலீசாரின் டார்ச்சர் தொடர்ந்தால் நானும் அம்மாவும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைதான் ஏற்படும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

போலீசார் மறுப்பு


ஆனால் காசியின் சகோதரி கூறும் தகவல்களை சிபிசிஐடி போலீசார் மறுத்துள்ளனர். அப்பா, அண்ணன் மீதான பாசத்தால் அவர் இப்படி பொய் சொல்கிறார். காசியிடமிடருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்களில் ஆபாச படங்கள், வீடியோக்களை இருந்தது அவரின் குடும்பத்தினருக்கும் தெரியும்.

ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது. துப்பாக்கி காட்டி மிரட்டியதாகச் சொல்வதில் உண்மையில்லை. இந்த வழக்கில் காசிக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

காசி வட்டாரங்கள் பீதி


காசி, இன்ஜினீயரிங் படித்தவர். மேலும் அவர் தன்னுடைய உடல் அழகைக் காட்டும் வகையில் ஏராளமான வீடியோக்களை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதோடு சமூக சேவை செய்வது போன்ற வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் பழகும் காசி, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றி வந்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர். அவரால் பாதிக்கப்பட்ட பெண்களும் இந்தத் தகவலை போலீசாரிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காசி சிக்கியதும் அவரோடு தொடர்பிலிருந்தவர்கள் கலக்கமடைந்தனர். மேலும் சிலர் இந்த வழக்கிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட்டனர். நாகர்கோவில் போலீசாரிடமிருந்து சிபிசிஐடி போலீசார் வசம் வழக்கு சென்றதும் காசியின் தொடர்பு வட்டாரங்கள் பீதியடைந்துள்ளன.
காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது அவர் அளித்த தகவல்கள் அனைத்தும் வாக்குமூலமாக வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காசி வழக்கின் சாட்சிகளிடமும் போலீசார் விசாரித்து அந்த விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

சிபிசிஐடிக்கு நெருக்கடி

இவ்வாறு காசிக்கு எதிரான ஆதாரங்களை சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் சேகரித்து வைத்துள்ள சிபிசிஐடி போலீசாருக்கு தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காசியின் சகோதரி திடீரென போலீசாருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்துள்ளார். அதனால் சிபிசிஐடி போலீசார், காசியின் வழக்கை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் காசியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு அந்த அறிக்கையையும் போலீசார் வசம் உள்ளது. அதனால் இந்த வழக்கிலிருந்து காசி மற்றும் அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் தப்பிக்க முடியாது என்று சிபிசிஐடி போலீசார் நம்பிக்கையுடன் உள்ளனர்.
காசியின் வழக்கின் அடுத்தடுத்த திருப்பங்களால் இன்னும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *