நடிகைகள் மூலம் தங்கத்தை கடத்த திட்டம்

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகைகளை பயன்படுத்தி தங்கத்தை கடத்த திட்டமிட்டிருந்தது. என்ஐஏ விசாரமையில் தெரியவந்துள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் கடந்த 5-ம் தேதி பிடிபட்டது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முக்கிய குற்றவாளி பைசல் பரீத் துபாயில் பதுங்கியுள்ளார். அவரை இந்தியா கொண்டு வர என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவுடன் இணைந்து செயல்பட்ட ஹம்ஜத் அலி கைது செய்யப்பட்டு என்ஐஏ கஸ்டடியில் உள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


“நடிகர், நடிகைகள் மூலம் தங்கத்தை கடத்த திட்டமிட்டிருந்தோம். இதுதொடர்பாக நடிகை பூர்ணா (ஷாம்னா காசிம்), நடிகர் தர்மஜன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். மேலும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கலை தொடர்பு கொண்டோம். குறிப்பாக துபாய் உள்ளிட்ட நகரங்களில் கலைநிகழ்ச்சி நடத்த செல்லும் நடிகர், நடிகைகள் மூலம் தங்கத்தை கடத்தி வர திட்டமிட்டிருந்தோம்” என்று ஹம்ஜத் அலி என்ஐஏவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தங்ககடத்தல் கும்பல் தன்னை கடத்தி வைத்து துன்புறுத்தியதாக நடிகை பூர்ணா அண்மையில் போலீஸில் புகார் செய்துள்ளார். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே என்ஐஏ அதிகாரிகளின் கவனம் பூர்ணா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது.


ஐபிஎஸ் அந்தஸ்திலான கேரள போலீஸ் உயரதிகாரிகள் ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களும் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.


ஸ்வப்னாவுடன் தொடர்பில் இருந்த கேரள தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளர் சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஸ்வப்னாவின் தங்க கடத்தல் உள்பட அனைத்து முறைகேடுகளும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு தெரியும் என்று என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தங்க கடத்தில் வழக்கில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *