மூணாறு மண் சரிவு.. இதுவரை 23 தொழிலாளர்கள் பலி.. 49 பேரை காணவில்லை…

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தின் மூணாறு மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.


மூணாறின் பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் நேற்று அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆங்காங்கே கொட்டகைகளில் தங்கியிருந்தனர். அவர்கள் மீது மண் சரிந்து விழுந்தது. காலை 6 மணிக்கே நிலச்சரிவு குறித்த தகவல் அரசு அதிகாரிகளுக்கு கிடைத்தது.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க போராடும் மீட்புப் படை வீரர்கள்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க போராடும் மீட்புப் படை வீரர்கள்.


உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இதுவரை 23 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 12பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மண் சரிவில் சுமார் 49 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கேரளாவின் கோழிக்கோட்டில் நேற்றிரவு விமான விபத்து நேரிட்டது. அந்த விமான விபத்து மீட்புப் பணிக்கு அரசு அதிகாரிகள் அதிக முன்னுரிமை அளித்து வருகின்றனர். ஊடகங்களும் வளைத்து வளைத்து செய்தி வெளியிடுகின்றன. ஆனால் மூணாறு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழப்பு பெரிதாகப் பேசப்படவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *