கேரளாவில் நிலச்சரிவு.. 9 பேர் பலி.. 85 பேரை காணவில்லை…

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தின் மூணாறு மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.


மூணாறின் பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆங்காங்கே கொட்டகைகளில் தங்கியிருந்தனர். அவர்கள் மீது மண் சரிந்து விழுந்தது. காலை 6 மணிக்கே நிலச்சரிவு குறித்த தகவல் அரசு அதிகாரிகளுக்கு கிடைத்தது.

நிலச்சரிவு மீட்புப் பணிக்காக வாகனத்தில் புறப்பட்ட வீரர்கள்


உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இதுவரை 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மண் சரிவில் சுமார் 85 பேர் சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களை மீட்க விமானப் படையின் உதவியை கேரள அரசு கோரியுள்ளது. இதையேற்று விமானப்படை ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. மூணாறு பழங்குடியின மக்கள் மீட்புப் பணியில் பெரிதும் உதவி வருகின்றனர்.


சம்பவ இடத்தில் மழை வெள்ளத்தால் முக்கிய பாலம் உடைந்து விழுந்துள்ளது. அங்கு தற்காலிக பாலம் அமைக்க அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *