சென்னை கொரட்டூரில் ரயில்வே சுரங்கப்பாதையை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை கட்டும் பணி கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குள் சுரங்கப்பாதையை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் நிலம் கையகப்படுத்துதல்,ஒப்பந்ததாரர் பிரச்சினை, பருவமழை உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கொரட்டூர் சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி கடந்த புதன்கிழமை காணொலிவாயிலாக சுரங்கப்பாதையை திறந்துவைத்தார். இந்த பாலம் உட்பட தமிழகம் முழுவதும் 21 பாலங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.