டிச. 14 முதல் கோயம்பேட்டில் மலர்ச் சந்தை

டிச. 14 முதல் கோயம்பேட்டில் மலர்ச் சந்தை செயல்பட உள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் ஷன் சோங்கம் ஜடக் சிருவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சந்தித்துப் பேசினார். அப்போது கோயம்பேட்டில் மலர்ச்சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இதை ஏற்றுக் கொண்ட ஷன் சோங்கம் ஜடக் சிரு, டிச. 14-ம் தேதி மலர்ச் சந்தையை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததற்கு தமிழக அரசுக்கு விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *