கோயம்பேட்டில் சிறு பழ விற்பனை கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டது. வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டது.
இந்த சந்தையில் படிப்படியாக கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1-ம்தேதி மொத்த பழக்கடைகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சிறு பழ விற்கனை கடைகள் கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
“கொரோனா விதிமுறைகளை அனைத்து கடைகளும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் கடைக்கு சீல் வைக்கப்படும்” என்று கோயம்பேடு சந்தை நிர்வாகம் எச்சரித்துள்ளது.