கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் திரண்ட மக்கள் கூட்டத்தால் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டு திருமழிசைக்கு மாற்றப்பட்டது.
வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று 6 மாதங்களுக்குப் பிறகு கோயம்பேடு காய்கறி சந்தை கடந்த செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கையாக கோயம்பேடு வியாபாரிகள், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 22 நாட்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இதுவரை 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோயம்பேடு சந்தை விவகாரத்தில் தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் காசிமேடு மீன் சந்தை உள்ளிட்ட வியாபார தலங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று சுகாதார துறை நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.