கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை மாற்றம்

தீபாவளியையொட்டி கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அப்போது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டது.

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று காய்கறி மார்க்கெட் மீண்டும் கோயம்பேட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விடப்படுகிறது. 

வரும் சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காய்கறிகள், பழங்கள் வாங்க ஏதுவாக வெள்ளிக்கிழமை விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் தரப்பில் மார்க்கெட் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. 

இதை ஏற்று கோயம்பேடு மார்க்கெட்டில் வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு, வாரந்திர பராமரிப்பு பணிக்காக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *