கோயம்பேடு மார்க்கெட் 28-ம் தேதி திறக்கப்படுகிறது

கோயம்பேடு மார்க்கெட் 28-ம் தேதி திறக்கப்படுகிறது.
சென்னையில் கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதற்கு காரணமாக அமைந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது.

தற்காலிகமாக திருமழிசையில் மொத்த காய்கறி சந்தை செயல்படுகிறது. வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும்.தனிநபர் கொள்முதல், சில்லறை வணிகத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது.

ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படாது. கோயம்பேடு வணிக வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மார்க்கெட்டுக்கு வரும் அனைவருக்கும் நாள்தோறும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படும்.

கோயம்பேடு சந்தையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடப்படும்.

விதிமீறல் கண்டறியப்பட்டால் காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிஎம்டிஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *