கோயம்பேடு சிறு மொத்தவிலை காய்கறி கடைகள் 15-ம் தேதி திறப்பு

கோயம்பேடு சிறு மொத்தவிலை காய்கறி கடைகள் வரும் 15-ம் தேதி திறக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோயம்போடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலை உணவு தானிய கடைகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு கடந்த செப்டம்பர் 28-ம் தேதி மொத்த விலை காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. கடந்த 1-ம் தேதி பழ விற்பனை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டன. 

இந்த பின்னணியில் வரும் 15-ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் சிறு மொத்தவிலை காய்கறி கடைகள் திறக்கப்படுகின்றன. மொத்தம் 800 கடைகள் திறக்கப்பட உள்ளன. எனினும் கொரோனா தடுப்பு நடைமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *