கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தற்போது 100 அடி சாலை, காளியம்மன் சாலை சந்திப்பில் பணி நடைபெற உள்ளது. இதனால் ரெட்டேரி, அண்ணா நகர் பகுதியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட், வெளியூர் பஸ் முனையத்துக்கு செல்ல மாற்றுப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது 100 அடி சாலை, திருமங்கலம் வழியாக கோயம்பேடு மார்க்கெட், வெளியூர் பஸ் முனையம் செல்ல மேலும் 200 மீட்டர் தொலைவு சென்று அடையார் ஆனந்த பவனம் மற்றும் 500 மீட்டர் தொலைவு சென்று எம்டிசி பஸ் டெர்மினல் அருகே திரும்பி வந்து (யு டர்ன்) காளியம்மன் சாலைக்கு செல்லலாம் என்று போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.