கோயம்பேட்டில் சில்லறை கடைகளுக்கு அனுமதி

கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் காரணமாக சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த செப்டம்பரில் மீண்டும் கோயம்பேட்டுக்கு மார்க்கெட் மாற்றப்பட்டது.

எனினும் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் வரும் 16-ம் தேதி முதல் கோயம்பேடு சந்தையில் பழம், காய்கறி சில்லறை கடைகளும் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வரும் 2-ம் தேதி முதல் கோயம்பேட்டில் மொத்த பழ வியாபாரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *