கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்து நோயாளி தள்ளிவிடப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அரசு மருத்துவமனைகள் மூலம் லட்சக்கணக்கான ஏழைகளின் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அரசு மருத்துவமனை டாக்டர்களை கடவுள்களாகவே ஏழைகள் பாவிக்கின்றனர்.
ஆனால் சில நேரங்களில் அரசு மருத்துவமனையின் சில ஊழியர்களின் மனிதாபிமானம் அற்ற செயல்களால் அவப்பெயர் ஏற்படுகிறது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை வார்டில், சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட நோயாளி, மருத்துவமனை ஊழியர் தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
தவறிழைத்த அரசு ஊழியர் பாஸ்கரன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊத்தங்கரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.