வங்கி கே.ஒய்.சி. நடைமுறைகளில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களை புதுப்பிக்காதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. கடன் வழங்குவது போன்ற சேவைகளை நிறுத்தக்கூடாது. புதிய வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை வீடியோ மூலமாக கே.ஒய்.சி விவரங்களை நிரப்ப வாய்ப்பு தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.