பாபர் மசூதி இடிப்பு வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேர் உயிரிழந்துவிட்டனர். தற்போது 33 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் வழக்கை விசாரித்து வருகிறார்.
வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக விசாரணை முழுவதும் ஆன்லைன் நடைமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது. முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் யாதவிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அந்த வரிசையில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வாக்குமூலம் அளித்தார். வழக்கு விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது.