கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் இந்த திட்டங்களில் பயன்பெற தமிழக அரசின் நலவாரியங்களில் கண்டிப்பாக உறுப்பினராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நலவாரிய அலுவலகங்களுக்கு தொழிலாளர்கள் நேரில் சென்று பெயர்களை பதிவு செய்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக தொழிலாளர் துறையின் கீழ் 17 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்படுகின்றன.
http://labour.tn.gov.in என்ற இணையம் வாயிலாக 17 வாரியங்களிலும் உறுப்பினர்களாக இணையலாம் என்று தெரிவித்துள்ளார்.
இணையதளம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாதவர்கள், அந்தந்த பகுதி தன்னார்வலர்கள், படித்தவர்கள் உதவியுடன் நலவாரியங்களில் இணைந்து கொள்வது அவசியம் என்று தொண்டு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.