மெட் பிகினி சேலஞ்ச்..உள்ளாடை சவாலில் தொபுக்கடீர்னு குதித்த பெண் டாக்டர்கள்…

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக ‘மெட் பிகினி சேலஞ்ச்’ என்ற சவால் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

மெட் பிகினி சவாலில் டாக்டர் சாரா.
மெட் பிகினி சவாலில் டாக்டர் சாரா.


இந்த சவாலை ஏற்கும் பெண் டாக்டர்கள், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சமூக வலைதங்களில் தங்களது பிகினி புகைப்படங்களை பளிச்சென பகிர்ந்து வருகின்றனர். இதற்கு லைக்குகள் லட்சக்கணக்கில் குவிந்து வருகின்றன.


அமெரிக்காவின் ஹவாய் பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் கேண்டிஸ் என்பவர் ஒரு படி மேலே போய், உள்ளாடையுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவே தொடங்கிவிட்டார்.
“டாக்டர் பிகினி உங்களை காப்பாற்றுவார்” என்று தலைபிட்டு அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்திலும் பதிவேற்றியுள்ளார்.

மெட் பிகினி சவாலில் பங்கேற்ற பெயர் வெளியிடாத பெண் டாக்டர்.
மெட் பிகினி சவாலில் பங்கேற்ற பெயர் வெளியிடாத பெண் டாக்டர்.

அந்த பதிவுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் போட்டுள்ளனர்.
உள்ளாடை சவாலில் பெண் டாக்டர்கள் வெறித்தனமாக களமிறங்கிவிட்டனர். மாடல் அழகிகள் எல்லாம் இந்த பெண் டாக்டர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்ற அளவுக்கு பிகினி பேஷனில் அசத்துகின்றனர்.


இதற்கிடையில் மெட் பிகினி சேலஞ்ச் குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இணையத்திலும் ஊடகங்களிலும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
பிழைப்பு இல்லாத பெண் டாக்டர்கள், பிகினி சவாலில் பங்கேற்று டாக்டர் தொழிலுக்கே களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

பெயர் வெளியிடாத பெண் டாக்டர்.
பெயர் வெளியிடாத பெண் டாக்டர்.

இது மருத்துவ தர்மத்துக்கு எதிரானது என்று ஒரு தரப்பினர் உரக்க குரல் எழுப்புகின்றனர்.
இதை மறுக்கும் மற்றொரு தரப்பினர், பெண் டாக்டர்கள் தங்களுக்கு விருப்பமான உடையை அணிய அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது.

மெட் பிகினி சவாலில் டாக்டர் டெய்சி
மெட் பிகினி சவாலில் டாக்டர் டெய்சி

அவர்கள் என்ன உடை அணிந்தால் உனக்கென்ன என்று வாதிடுகின்றனர்.
இன்னும் கொஞ்ச காலத்துக்கு மெட் பிகினி சவால் இணையத்தில் சூறாவளியாக சுழன்றடிக்கும் என்று மருத்துவ வானிலை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சவால் நிச்சயம் இந்தியாவில் கரை ஒதுங்காது என்று உறுதியாக நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *