அப்பா இறந்த சோகத்திலும்.. சுதந்திர தின விழாவில் வீறுநடை.. நெகிழ வைத்த பெண் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி

திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆயுத படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி. இவரது அப்பா நாராயணசுவாமி கடந்த 14-ம் தேதி இரவு காலமானார்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் இன்று இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சுதந்திர தின விழாவுக்காக கடந்த ஒரு வாரமாக மகேஸ்வரி தலைமையில் அணிவகுப்பு பயிற்சி நடைபெற்றது.

பாளையங்கோட்டை சுதந்திர தின விழாவில் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு.
பாளையங்கோட்டை சுதந்திர தின விழாவில் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு.

திடீரென வேறு ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க முடியாத நிலையில் அப்பா இறந்த சோகத்தை மறைத்து பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மகேஸ்வரி பங்கேற்றார்.

அணிவகுப்பை நிறைவு செய்ததும் அவரது கண்கள் குளமாகின. அருகில் இருந்த காவலர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

இதன்பிறகு தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மகேஸ்வரி புறப்பட்டு சென்றார். அவருக்கு விறைப்பாக சல்யூட் அடிக்க வேண்டியது நமது கடமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *