லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட லட்சுமி விலாஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.25,000-க்கு மேல் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிபிஎஸ் தனியார் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.