நில அளவை கட்டணம் உயர்வு

நில அளவைத் துறை சார்பில் நில அளவைக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது, இந்த கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


புல அளவீட்டு புத்தக பிரதி ஏ4 அளவு ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆகவும், ஏ3 அளவு ரூ.100 ஆகவும், புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.200 ஆகவும், கோணமானியை பயன்படுத்தி பக்க எல்லைகளை சுட்டிக்காட்டுதல் ரூ.30-ல் இருந்து ரூ.300 ஆகவும், நில அளவரின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு ஒரு பக்க எல்லைக்கான கட்டணம் ரூ50ல் இருந்து ரூ400 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.

உட்பிரிவு, பாகப்பிரிவினைக்கு முன்னர் நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம் புன்செய் நிலம் ரூ30ல் இருந்து ரூ1000 ஆகவும், நன்செய் நிலம் ரூ50ல் இருந்து ரூ2 ஆயிரம் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீட்டுக்கான கட்டணம் புன்செய் நிலம் ரூ60-ல் இருந்து ரூ2 ஆயிரம் ஆகவும், நன்செய் நிலம் ரூ60-ல் இருந்து ரூ4 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நில அளவை குறியீட்டின் தொகை செலவினங்களுக்கான கூடுதல் கட்டணம் 400 சதவீதத்தில் இருந்து 800 சதவீதம் ஆகவும், மாவட்ட வரைபடம் ரூ189ல் இருந்து ரூ500 ஆகவும், மாவட்ட வரைபடம் ரூ51ல் இருந்து ரூ300 ஆகவும், வட்ட வரைபடம் ரூ357ல் இருந்து ரூ1000 ஆகவும்,

வட்ட வரைபடம் ரூ51ல் இருந்து ரூ500 ஆகவும், நகரம் பிளாக் வரைபடங்கள் ரூ27ல் இருந்து ரூ50 ஆகவும், கிராம வரைபடம் ரூ85ல் இருந்து ரூ200 ஆகவும், உட்பிரிவு கட்டணம் கிராமப்புறத்தில் ரூ40ல் இருந்து ரூ400 ஆகவும், நகராட்சி பகுதிகளில் ரூ50ல் இருந்து ரூ500 ஆகவும், மாநகராட்சிகளில் ரூ60ல் இருந்து ரூ600 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த கட்டணம் உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *