நிலம் வரன்முறை காலம் நீட்டிப்பு

நிலம் வரன்முறை காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கும் திட்டம் கடந்த 2019 ஆகஸ்ட் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது.

மேலும் நீர்நிலைகள் உள்ளிட்ட ஆட்பேசத்துக்கு உரிய நிலங்களை ஆக்கிரமித்திருப்பவர்களை அங்கிருந்து அகற்றி வேறு புறம்போக்கு நிலங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இந்த திட்டத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் நிலங்களை வரன்முறை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இத்திட்டத்தின் கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து நிலம் வரன்முறைபடுத்தும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *