வாடகைதாரர் விவரங்களை டிச.31-க்குள் போலீஸ் நிலையங்களில் அளிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.
“சென்னையின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் குடியிருப்பதாகவும் அவர்களால் பொது ஒழுங்கு, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிய வருகிறது.
எனவே சென்னை மாநகர குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாடகைதாரர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டிய அவசியம் காவல் துறைக்கு எழுந்துள்ளது. எனவே வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வரும் டிச. 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காக தனி படிவம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படிவத்தை பூர்த்தி செய்து வாடகைதாரர் புகைப்படத்துடன் அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.