புதுடெல்லி
திருமணத்தின்போது மணப்பெண் லேப்டாப்பில் மூழ்கியதால் மணமகன் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அரசு, தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவன ஊழியர்கள், அலுவலகத்தின் டார்ச்சரால் கணினி, லேப்டாப்பில் சிறைபட்டு கிடக்கின்றனர்.
இதை வெட்டவெளிச்சமாக்கும் வகையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
திருமண விழா ஒன்றில் மணக்கோலத்தில் இருக்கும் புது மணப்பெண். லேப்டாப்பில் மூழ்கி சீரியசாக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் மணமகனை எட்டி கூட பார்க்கவில்லை. அருகே சென்றபோதும் மணமகள் கண்டுகொள்ளவில்லை. மணமகன் மேலாக்க, மல்லாக்க, கீழாக்க பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.
இதை வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நீங்கள் பணி அழுத்தத்தில் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள். உங்கள் கவலை மறந்துவிடும் என்று பெரும்பாலான நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.
ஒரு வலைதளவாசி, “ஒருவேளை மணப்பெண் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறாரோ” என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோ இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.