தமிழக அரசு சார்பில் “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பின்னணியில் “உங்கள் தொகுதியில் முதல்வர்” துறையின் சார்பில் பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக http://cmcell.tn.gov.in/register.php என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.
chief minister’s special cell, Secretariat, Chennai-9 என்ற முகவரிக்கு தபால் மூலம் புகார்களை அனுப்பலாம். 044-25671764 என்ற தொலைபேசி எண்ணிலும் cmcell@tn.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் புகார்களை அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.