சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க நவ. 18 வரை அவகாசம்

சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க நவ. 18 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் 3 ஆண்டு எல்எல்பி, 2 ஆண்டு எல்எல்எம் பட்டப்படிப்புகளுக்கு இணைய வழியிலும் நேரடியாகவும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்ப பதிவுக்கு நவ. 18 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவரை இணையவழியிலும் நேரடியாகவும் விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை tndalu.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *