3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்

3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.

“தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கல்லூரிகளில் 202-21 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் நேரிலும் இணைய வழியிலும் வழங்கப்படுகிறது.

அதன்படி 3 வருட சட்டப்படிப்புகளுக்கான (எல்எல்பி) விண்ணப்பம் வரும் 30-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அக்டோபர் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tndalu.ac.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 11 அரசு கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு 1,400-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *