சட்டம் படித்து அட்வகேட் ஆகணுமா? ஆன்லைன்ல அப்ளிகேஷனை போடுங்க…

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 10 இடங்களில் சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் 5 ஆண்டுகால இளங்கலை சட்டப்படிப்பில் (எல்எல்பி) சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்குகிறது.


பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சட்ட பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in இணையதளம் வாயிலாக செப்டம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேரடி விண்ணப்பங்கள் வரும் 10-ம்தேதி முதல் வழங்கப்படுகின்றன.


பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான 3 ஆண்டு கால இளங்கலை சட்டப்படிப்பு, முதுகலை சட்டப்படிப்பு விண்ணப்பம் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *