அலட்சியம்..ஒற்றை வெடி..150 பேர் பலி..3 லட்சம் பேரின் வீடு காலி..40,000 கோடி அம்போ…

மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள சிறிய நாடு லெபனான். இந்த நாட்டின் தலைநகர் பெய்ரூட். இது துறைமுக நகரமாகும். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெடிமருந்துகளுடன் லெபனான் எல்லைக்குள் நுழைந்த ஒரு கப்பலை அந்த நாட்டு கடற்படை மடக்கிப் பிடித்தது.


அந்த கப்பலில் சுமார் 3 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் இருந்தது. அபாயகரமான அந்த வெடிபொருளை பெய்ரூட் துறைமுகத்தின் கிட்டங்கியில் வைத்திருந்தனர். கடந்த 4-ம் நள்ளிரவு 12 மணி அளவில் வெடிமருந்து கிடங்கு பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

பெய்ரூட் துறைமுகத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் சின்னாபின்னாமாகியுள்ளது.
பெய்ரூட் துறைமுகத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் சின்னாபின்னாமாகியுள்ளது.


துறைமுக வட்டாரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவு வரை உள்ள கட்டிடங்கள் சுக்குநூறாக நொறுங்கின. அந்த வகையில் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.


இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த தீய்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதிலமடைந்துள்ள பெய்ரூட் துறைமுகம்
சிதிலமடைந்துள்ள பெய்ரூட் துறைமுகம்


இதற்கெல்லாம் காரணம் லெபனான் அரசின் அலட்சியம். ஆபத்தான 3 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட்டை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாற்றுமாறு சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த குரல் அரசின் செவிக்கு ஏறவில்லை. ஆட்சியாளர்களின் அலட்சியத்துக்கான விலை 150 உயிர்கள் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *