காலாவதி எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்கலாம்

காலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க வரும் அக்டோபர் 9-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 5 ஆண்டுகள் வரையிலான காலாவதி பாலிசிகளை புதுப்பிக்கலாம். மருத்துவ பரிசோதனை தேவைப்படும் பாலிசிகளுக்கு இந்த சலுகை பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


காலதாமதமாக செலுத்தப்படும் பிரிமியம் தொகைக்கு விதிக்கப்படும் அபராத தொகையில் ஒரு லட்சம் ரூபாய் வரை 30 சதவீதமும் 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு 30 சதவீதமும் சலுகை வழங்கப்படும். குறிப்பிட்ட வகை பாலிசிகளுக்கு இந்த சலுகை பொருந்தாது என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *